Videos Categories
Home
Kollywood Talkies
Kollywood Masala
Celeb Talk
Meals Ready
Hangouts
Chennai Diary
Chennai Bazaar
Traffic
Other Services
  Classifieds
  Yellow pages
  Maps
  Events
 
Chennai Live >>  News
சென்னை அணியில் பிளிண்டாப் Friday, 06 February , 2009, 12:49
பனாஜி

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) அணிகளுக்கான வீரர்கள் ஏலம் பிப்-6 அன்று தொடங்கியது. இங்கிலாந்து வீரர் பிளிண்டாப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.55 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

2009 ஏப்ரல் மாதத்தில் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் பங்கேற்கும் உள்ளூர் அணிகளுக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் ஏலம், கோவாவில் பிப்-6 அன்று தொடங்கியது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.55 மில்லியன் டாலர் கொடுத்து, இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளிண்டாபை வங்கியுள்ளது.

கெவின் பீட்டர்சனை, இதே தொகை 1.55 மில்லியன் டாலர் கொடுத்து பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வாங்கியது.

இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்ச தொகைக்கு வங்கப்பட்ட இரண்டு வீரர்கள் பிளிண்டாப்பும் பீட்டர்சனும் ஆவார்கள்.

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டுமினியை, மும்பை இந்தியன் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த முறை ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஷான் டெய்ட்டை 375,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது.

(டிஎன்எஸ்)

 
 
Email to friend | Comments | Print More news >>
   
© Copyright Sify Ltd, 1998-2006. All rights reserved. India News Portal, Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet Data Centre.
Site optimized for Internet Explorer 5.5 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| About Us | Feedback | Advertise with us