|
|
| |
 |
| Chennai Live >>
News |
| இலங்கை: பான் கி-மூன் கவலை |
Friday, 06 February , 2009, 12:48 |
|
|
 |
கொழும்பு
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
கொழும்பில் இலங்கை அதிபர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா வந்த ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கி- மூன், தில்லியிலிருந்து 05.02.2009 அன்று இரவு,
அதிபர் ராஜபக்சேவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெறும் ராணுவ நடவடிக்கை குறித்து ராஜபக்சேவிடம் கேட்டறிந்தார்.
வடக்குப் பகுதியில் தற்போதைய போர் நிலவரம், விடுதலை புலிகளின் பயங்கரவாதச் செயல் உள்ளிட்டவை
குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ராஜபக்சே விவரித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் ராஜபக்சே உடனான 15 நிமிட இந்தப் பேச்சு வார்த்தையின் போது இலங்கையின் தற்போதைய சூழல்
குறித்தும், அப்பாவி மக்கள் போரில் பலியாவது குறித்தும் பான் கி மூன் கவலை தெரிவித்தார்.
(டிஎன்எஸ்)
|
| |
|
| |
| Email to friend | | Print |
More news >> |
|
|
|
|
 |
|
|
|
|
|
 |
|
|
 |
|