|
|
| |
 |
| Chennai Live >>
News |
| தலைகுனிவு: சோனியா வருத்தம் |
Friday, 06 February , 2009, 11:56 |
|
|
 |
புதுதில்லி
உத்திரபிரதேசத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் சிறுமியைத் தாக்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எடவா என்ற இடத்தில் பணத்தைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு 6 வயது
சிறுமியைக் காவல் துறையினர் அடித்து உதைத்தனர். இந்தக் காட்சியை சில தொலைக்காட்சிகளும் நேரடியாக
ஒளிபரப்பியதை அடுத்து, இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில் தில்லியில் பிப். 5 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
அதில் பங்கேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா பேசுகையில். குழந்தைகளை கடவுளின் மறு உருவமாக நாம்
கூறுகிறோம். அவர்களின் உரிமைகளுக்குப் பல சட்டங்கள் உள்ளன. ஆனால் உத்திரபிரதேச மாநிலத்தில்
நடைபெற்றது போன்ற சம்பவங்களால் வெட்கத்தால் நாம் தலைகுனிவு அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
(டிஎன்எஸ்)
|
| |
|
| |
| Email to friend | | Print |
More news >> |
|
|
|
|
 |
|
|
|
|
|
 |
|
|
 |
|