|
|
| |
 |
| Chennai Live >>
News |
| ஐ.பி.எல்.: விறுவிறுப்பான ஏலம் |
Friday, 06 February , 2009, 11:56 |
|
|
 |
பனாஜி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது இந்தியன் பிரிமியர் (ஐ.பி.எல்.) வீரர்களுக்கான ஏலம், பிப்-6 அன்று
நடக்கிறது.
இரண்டாவது ஐ பி எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இந்தியாவில்
தொடங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் பிளின்டாஃப்பை ஏலம் எடுக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தியன் பிரிமியர்
லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு முதலாவது உள்ளூர் 'டுவென்டி-20' தொடர் நடந்தது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும்
வீரர்களை ஏலம் முறையில் கோடிகளைக் கொட்டி எடுத்தன. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக
தோனி அதிகபட்சமாக ரூ. 6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இரண்டாவது ஐ.பி.எல்., தொடர், 2009 ஏப்ரலில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு
வீரர்களை, ஒவ்வொரு அணிகளும் ஏலம் முறையில் ஒப்பந்தம் செய்ய உள்ளன.
இதற்கான ஏலம், பிப்-6 அன்று கோவாவில் உள்ள பனாஜியில் நடக்கிறது. இங்கிலாந்தின் பிளின்டாப், பீட்டர்சன்,
ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் கிளார்க், ஷான் டெய்ட், இலங்கையின் கபுகேதரா உள்ளிட்ட 43 வெளிநாட்டு
வீரர்கள் களத்தில் உள்ளனர்.
|
| |
| 1 | 2 Next >> |
| |
| Email to friend | | Print |
More news >> |
|
|
|
|
 |
|
|
|
|
|
 |
|
|
 |
|