|
|
| |
 |
| Chennai Live >>
News |
| 40 குழந்தைகளுக்கு விருதுகள் |
Friday, 06 February , 2009, 11:55 |
|
|
 |
புது தில்லி
தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி பல துறைகளில் சிறந்து விளங்கிய 40 குழந்தைகளுக்கு தேசிய குழந்தைகள்
விருதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவர் திருமதி சோனியா காந்தி வழங்கினார். மேலும் தேசிய
குழந்தைகள் தின நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு :
மறைந்த திருமதி இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 அன்று நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றுக்
கொண்டார். அந்த தினம் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 24,
2009 தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்
புது தில்லியில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழாவில் 2007-08ஆம் ஆண்டுக்கான, கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய துறைகளில்
சிறந்து விளங்கிய 40 குழந்தைகளுக்கு தேசிய குழந்தைகள் விருதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்
திருமதி சோனியா காந்தி வழங்கினார். மேலும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
அமைச்சர் ஆ.இராசா தேசிய குழந்தைகள் தின அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் திருமதி சோனியா காந்தி பேசியதாவது:
குழந்தைகள் நாட்டின் சொத்துகள். அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறும் போது நாம் அனைவரும் அதற்கு
எதிராக ஒன்று திரண்டு நிற்க வேண்டும். தவிர குழந்தைகள் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு தொழிலாளர்
சட்டங்களை வலுப்படுத்துவது அவசியமாகும். மேலும் குழந்தைகள் திருமணம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு
எதிரான வன்முறையை நிறுத்தும் வகையில் இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களின்
நலனுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட விரிவாக்கம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத்
தொகையை அதிகப்படுத்தியது, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் அமைத்தது, மகளிர் சுயஉதவிக்
குழுக்களுக்கு அதிகமான ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு திருமதி சோனியா காந்தி பேசினார்.
|
| |
| 1 | 2 Next >> |
| |
| Email to friend | | Print |
More news >> |
|
|
|
|
 |
|
|
|
|
|
 |
|
|
 |
|